சிங்கம் 3 பட டீசர் விமர்சனம் – S3 Teaser Review

Must read

singam-3-teaser-review
இதுவரை இல்லாத அளவுக்கு சூர்யாவின் படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. காரணம் சிங்கம் 3 டீசர் தான் என்று கூறலாம். நேற்று மாலை வெளியான இந்த டீசர் 12 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் ஹிட்ஸ்களை அள்ளியுள்ளது. சரி சிங்கம் 3 டீசர் எப்படி இருக்குன்னு ஒரு விமர்சனம் பார்க்கலாம் வாங்க.
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் சிங்கம் 3 படத்தை ஹரி இயக்கியுள்ளார். டிசம்பர் 16ம் தேதி படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளார்கள். இப்ப இருக்குற மாஸ் ஹிரோக்கள் எல்லோரு எதுக்கு ஏதாவது ஒரு பழைய பாடலை வைத்து டீசரை வடிவமைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே அஜித் வேதாளம் படத்தில் “கண்ணா மூச்சி ரே ரே” என்ற பாடலையும், விஜய் தெறி படத்தில் ட்விங்கிள் ட்விங்கிள் என்ற ரைம்ஸ் பாடலையும் வைத்து டீசரை வெளியிட்டனர். தற்போது இதே பாணியில் சிங்கம் 3 படத்தின் டீசரும் அமைந்துள்ளது.
”ஒரு தவறு செய்தால்
அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும்
விடமாட்டேன்”
இந்த வரிகளுடன் தொடங்குகிறது சிங்கம் 3 டீசர்
படத்தின் டீசரை பார்த்தால் சூர்யா தமிழ்நாடு போலீஸ் இல்லை என்பது தெளிவாக புரிகிறது. ஆந்திராவில் நடக்கும் ஏதோ ஒரு தவறை கண்டுபிடித்து அதை வெளிநாடு வரைக்கும் சென்று அழித்து காட்டுவதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
டீசரின் ஆரம்பத்திலிருந்தே சூர்யா கம்பீரமான மற்றும் ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரியாக வருவதால் ஆக்‌ஷனுக்கு பஞ்சம் இருக்காது என்பது தெளிவாக புரிகிறது.
அனுஷ்கா போலீஸ் ஸ்டேஷனுக்குள் எண்ட்ரி, ஸ்ருதிஹாசன் ஸ்டேஷனிலிருந்து எக்சிட் என இவர்கள் இருவருக்கும் ஒரு ஷாட் மட்டுதான் டீசரில் கிடைத்திருக்கிறது.
மொத்தத்தில் சிங்கம் 3 படம் ஆக்சன் விரும்பிகளுக்கு விருந்தளிக்கும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
சிங்கம் 3 பட டீசர் https://patrikai.com/singam-3-official-trailer/

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article