எஸ்.எஸ்.ராஜமௌலீ இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா, சத்தியராஜ், நாசர் என நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த ஆண்டு வெளியான பாகுபலி படம் இந்திய திரைப்படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து அனைவருக்கும் சவால் விட்டது.
அதுமட்டுமல்ல கிட்டத்தட்ட படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியும் இந்த படத்துக்கான மவுசு குறையவில்லை அதற்கு காரணம் முதல் பாகத்தில் இவர் கதையை முடித்த விதம் தான். கட்டப்பா எதுக்கு பாகுபலியின் முதுகில் குத்தி கொலை செய்தார் என்ற ஒரு கேள்வி இந்த திரைப்படத்தை இத்தனை நாட்களாகியும் கவனத்தை அதன் பக்கம் வைத்துள்ளது.
இதன்பிறகு அந்த ஒரு விஷயம் தாக்கு பிடிக்காதுன்னு புரிந்துக் கொண்ட ராஜமௌலி இன்று பிரபாஸின் பிறந்த நாள் என்பதனால் பாகுபலி படத்தின் 2வது பாகத்தின் முதல் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
எது எப்படியோ சீக்கிரமே கட்டப்பா எதுக்கு பாகுபலியை கொலை செய்தாருன்னு சொல்ல இன்னும் சில மாதங்கள்தான் காத்திருக்கனும். இருப்போம்ம்ம்ம்…