பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

Must read

26cp_ammani02_jpg_2486268f-415x280

பலதரப்பட்ட பிரச்சனைகளுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்…. அதிலும் குறிப்பாக, சினிமாவில் பெண்கள் தவறான முறையில் சித்தரிக்கப்படுவதற்காகவும், சமூக பொறுப்பை அலட்சியப்படுத்தும் செயல்களுக்காகவும் இத்தகைய வலிமையான ஊடகம் மற்றும் சினிமாவின் மூலமாக தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். பெரும்பாலான பெண்கள் உட்பட பலதரப்பட்ட மக்கள் எனக்கு ஆதரவு அளித்து வந்தாலும், சிலர் என்னுடைய கருத்தையும், முயற்சியையும் ஏற்றுக் கொள்ளவில்லை… ‘அம்மணி’ திரைப்படத்திற்கு பிறகு என்னுடைய குரல் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது என்பதை நான் முழுமையாக உணருகிறேன்… வெற்றி – தோல்வி என்பதை தாண்டி, நாம் நம்பும் பாதையில் நம்முடைய பயணத்தை மேற்கொள்வோம்….

உலகளவில் ‘அம்மணி’ திரைப்படம் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டிருக்கிறது…. ரசிகர்களிடம் இருந்து நாங்கள் தொடர்ந்து பெற்று வரும் கருத்துக்களும், வாழ்த்துக்களும் தான் அதற்கு சிறந்த உதாரணம்….சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ‘சான் ஜோஸ்’ நகரத்தில் அமைந்திருக்கும் ‘டௌனி சினிமாஸில்’ நாங்கள் எங்களின் ‘அம்மணி’ படத்தை திரையிட இருக்கின்றோம்…இதன் மூலம் திரட்டப்படும் லாபம் இந்திய கல்வி வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் ILP எனப்படும் இந்திய கல்வியறிவு திட்டத்திற்கு வழங்கப்படும் …. இந்த ஏற்பாட்டை செய்து தந்த ‘ஏ பி இன்டர்நேஷனல்’, ‘சினி கேலக்சி’ மற்றும் ‘ஸ்வரம்’ நிறுவனங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

எனக்கு உறுதுணையாய் இருந்த நண்பர்கள், நலன் விரும்பிகள் ஆகியோருக்கும், என்னுடைய இக்கட்டான சூழ்நிலைகளில் எனக்கு பக்கபலமாய் இருந்த என்னுடைய கணவர், என் மகள் மற்றும் என்னுடைய மகனுக்கும் (மருமகன்) நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….

இறைவனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டியதில்லை….ஏனென்றால் இவை அனைத்தையும் முடிவு செய்து நடத்தியது அவர் தான்….

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article