திசையன்விளை ஊர் மக்களுக்கு தெரியும். ..குமரேசனை..! அதான், வைகுண்டராஜன் மீது புகார் சொல்லும் அவரது சகோதரர்!

கட்ட பஞ்சாயத்து பேசி அதில் ஆள் கடத்தல் என சமூகவிரோத செயல்கள் செய்து வருபவர். குட்டிகலசன்விளையை சேர்ந்த ரத்தின நாடார் மனைவி தாலியை பறித்து இதனால் இவர் மீது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. கடத்தப் பட்ட நபர்கள் மீட்கப்பட்டு அடையாள அணிவகுப்பில் இவர் மீது அனைவரும் சரியாக அடையாளம் காட்டினர். சப் இன்ஸ்பெக்டர் பன்னிருகை பெருமாள் குற்றபத்திரிக்கையை தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றம் சாட்சிகள் சரியாக அடையாளம் காட்டியதால் குமரேசனை வழக்கில் இருந்து நீக்க மறுத்தது.
இந்த குமரேசனின் தொந்தரவால் ரத்தினநாடார் மகன் ஜெயராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ரெட்டை பூட்டு அதிகாரியின் பூட்டை உடைக்காமலேயே கிட்டங்கியில் இருந்த நெல்லை மாற்றி அதற்கு திருநெல்வேலி மாவட்ட குற்ற பிரிவில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. அரசுக்கு கொடுக்க வேண்டிய 55 டன் அரிசியை ஏப்பம் விட்டதற்கு தனியாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அரசு நிலத்தில் பனையை வெட்டி விற்கும் போது இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை வந்ததால். தனது அண்ணன் வைகுண்டராஜன் காலில் போய் விழுந்தார். வைகுண்டராஜன் தான் அவரை காப்பாற்றினார்.
கரைச்சுத்து புதூர் ஜெயமேரி அரிசி ஆலையில் ஒரு கிட்டங்கியில் இருந்த அவரை வீடு வாங்க வைத்து அரிசி ஆலை கட்ட வைத்து அரிசி ஆலை கட்டுவதற்கு டிக்-கில் வாங்கிய கடனை வட்டியும் முதலும் வைகுண்டராஜனே கட்டி குமரேசனுக்கு வருமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். நன்றி மறந்த குமரேசன் 2001-ல் வைகுண்டராஜன் தம்பி சுகுமார், வைகுண்டராஜனுக்கு கொடுக்க வேண்டிய இரண்டு கோடியையும் பெற்று ஏப்பம் விட்டு விட்டு வைகுண்டராஜனிடம இருந்து வெளியேறினார். தன் அண்ணனையே ஏப்பம் விட்டவர் தன்னை விட்டு வைப்பாரா என நினைத்து சுகுமாரும் குமரேசனை வெளியேற்றினார்.
Niyas Ahamed அவர்களின் முகநூல் பதிவு
Patrikai.com official YouTube Channel