நடிகர் அருண்விஜய், தொடர்ந்து தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு

Must read

சென்னை:
மதுபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதால்  கைது செய்யப்பட்ட நடிகர்  அருண்விஜய், காவல் துறையினரிடமிருந்து தப்பித்து ஓடியதை அடுத்து அவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னையில் நேற்று முன்தினம் நடிகை ராதிகா மகளின் திருமண வரவேற்பு, நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் திரை உலக பிரபலங்கள்  பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மதுபான வகைகள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்வில் பங்கேற்ற  நடிகர், நடிகைகள் பலர், தள்ளாடியபடிதான் ஓட்டலை விட்டு வெளியேறினர். ஆனாலும் போலீசார் கண்டுகொள்ளவில்லை.
உச்சபோதையில் காரை ஓட்டி வந்த நடிகர் அருண்விஜய், நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன் நின்ற போலீஸ் வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.  சிக்கலாகிவிட்டது. இதனால் நடிகர் அருண்விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து காவல்துறையினர் கைது செய்தனர்.
a
சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் போலீஸ் காவலில் இருந்த அருண்விஜய் திடீரென அங்கிருந்து தப்பி ஓடினார்.
இது குறித்து ஏற்கெனவே patrikai.com  இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இப்போது போலீசார், அருண்விஜய் தப்பி ஓடியதை முறைப்படி அறிவித்திருக்கிறார்கள். அவரை தேடி வருகிறார்கள். முதற்கட்ட நடவடிக்கையாக அருண் விஜய்யின் காரை பறிமுதல் செய்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article