டெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசினார். அபபோது தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி மற்றும் நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்கம் வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது, நிதி ஒதுக்கீடு, மெட்ரோ திட்டம்; நிர்மலா சீதாராமனிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 27) சந்தித்துப் பேசினா. தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 4 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்ல.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த முதல்வர் விஜய், தமிழ்நாட்டு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவும், ஒசூர், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்யவும் கோரிக்கை விடுத்தார்
மேலும், மாநிலத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, மாநில நிதிப் பகிர்வு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியுள்ளார்.
முன்னதாக, அரசு முறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு மத்திய நிதியமைச்சருடன் நடைபெறும் இந்த முக்கிய சந்திப்பில், தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நிதியமைச்சருடனான சந்திப்பின் போது, இந்திய அளவில் விரைவான பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்பதை முதல்வர் ஜோசப் விஜய் சுட்டிக்காட்டினார். இத்தகைய அதிவேக வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், மாநிலத்தின் முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்று அவர் குறிப்பிட்டார். அதன்படி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துறைமுகங்கள் மற்றும் தொழில் வழித்தடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே திட்டங்கள் போன்ற துறைகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சரிடம் முதல்வர் நேரில் கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் கல்வி மற்றும் நகர்ப்புற பொதுப் போக்குவரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் 2 முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்தச் சந்திப்பில் முன்வைத்தார்.
மேலும், தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் சர்வதேச தரத்திற்கு வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழ்நாட்டில் புதிதாக நிறுவிட வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் மிக முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை நவீனப்படுத்த வேண்டியது அவசியமாகும். எனவே, இந்த மூன்று நகரங்களிலும் மெட்ரோ இரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி சார்ந்த இந்த நியாயமான கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கனிவோடு பரிசீலிப்பார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

[youtube-feed feed=1]