சென்னை: மேகதாது அணை கட்ட ஒரு கல்லை கூட எடுத்து வைக்க விடமாட்டோம் என காங்கிரஸ் கட்சியைசேர்ந்த தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
மேகதாது அணைக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அறிக்கை தயார் செய்ய எந்த தடையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அணை கட்டுவதற்கான திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பில் , மேகதாதுவில் நிச்சயமாக அணை கட்டியே தீருவோம். தமிழக அரசு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டிற்கு கர்நாடக மக்களன் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேகதாதுவில் அணை மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முடிவை முன்னெடுத்துச் செல்வோம். இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என்றார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் , காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு ஒரு செங்கல்லைக்கூட எடுத்துவைக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இதுதான், ஒரு செங்கல்லைக்கூட வைக்க விடமாட்டோம்.
இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதல்வரின் நிலைப்பாடு என்னவோ, அதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. 5 ஆண்டுகள் இந்த ஆட்சி நிலைத்து நிற்கும். முதல்வரின் கரத்தை வலுப்படுத்துவதற்கு, இந்த ஆட்சியை 5 ஆண்டுகள் கொண்டு செல்வதற்கு, காங்கிரஸ் பேரியக்கம் உறுதுணையாக இரும்புக்கோட்டையாக முதல்வரின் பின்னால் இருப்போம என்றார்.
பல்கலைக்கழக வேத்ர் தொடர்பான கேள்விக்கு, முதல்வரே, பல்கலைக்கழக வேந்தர் என்பது முந்தைய அரசின் நிலைப்பாடு, அதை பின்பற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது. வேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் முடிவு எடுப்பார் என்று கூறினார்..
[youtube-feed feed=1]