சென்னை: ஓதுவார் பயிற்சி வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடபழனி ஓதுவார் பயிற்சி பள்ளியில் பகுதி நேர வகுப்புக்கில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பிரபல கோயில்களில் ஒன்று வடபழனி முருகன் கோயில். வடபழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கோயிலில் ஓதுவார் பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
திருமுறைகளை குறைவின்றி ஓதிட ஏதுவாக இக்கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. ஓதுவார் பயிற்சி பள்ளியில் பகுதி நேர வகுப்புகள் செயல்படுகிறது. ஓதுவார் பயிற்சி பள்ளியில பகுதிநேர வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஒதுவார் பயிற்சியில் சேர ஜூன் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஊக்கத்தொகை பெறலாம்.
ஓதுவார் பயிற்சி வகுப்பில் சேர 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்து மதத்தில் சைவ சம்பிரதாயத்தை பின்பற்றுவராக இருக்க வேண்டும்.
இயற்கையிலேயே நல்ல உடல் வளமும் குரல் வளமும் பெற்றிருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓதுவார் பயிற்சியில் சேருபவர்கள் 01.07.2026 அன்று 14 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
ஓதுவார் பயிற்சி காலம் 4 ஆண்டுகள் பகுதி நேரமாக இருக்கும். அதன்படி, காலை 6 மணி முதல் காலை 8 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும், வார இறுதி நாட்களில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு நேரமாக பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பகுதி நேர வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓதுவார் பயிற்சி வகுப்பு சேர்க்கைக்கான படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 8939083753, 9047810365 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]