சென்னை:  முந்தைய திமுக அரசால் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்ட சவுக்கு சங்​கர் மீதான குண்டர் சட்டத்தை விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரத்து செய்த நிலையில்,  சிறை​யில் இருந்து சவுக்கு சங்கர் விடுக்கப்பட்டார். இதையடுத்து, அவர்  முதல்​வர் விஜய்க்கு நன்றி தெரி​வித்​தார்.

 பிரபல யூடியூபரு​ம், சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யும், சவுக்கு சங்​கர்,  கடந்த திமுக ஆட்சியின்போது, ஆட்சியாளர்கள் குறித்து  பல்வேறு தகவல்களை தனது ஊடகத்தில் வெளியிட்டு வந்தார். மேலும் முதல்வர ஸ்டாலின் குடும்பம் குறித்தும், கட்சியினரின் ஊழல்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியிட்டார். இதனால், அவரை ஒடுக்க, காவல்துறை  மற்றும் கட்சியினர் கொண்டு பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டு,  அடுத்தடுத்து கைது  நடவடிக்கைகள் தொடர்ந்தன.  மேலும் அவர்மீது சென்னை  மாநகராக காவல்ஆணையராக இருந்த அருண் உத்தரவின்பேரில் போடப்பட்ட குண்டர் சட்டமும் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும், அவரை சிறையில் வைத்து கொடுமை படுத்துவதில் தீவிரமாக இருந்த திமுக அரசு,  கடந்த ஏப்​.9-ம் தேதி  அவரை மீண்டும் குண்​டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைத்தது.

இந்த நிலையில்,  புதிய அரசு அமைந்​துள்ள நிலை​யில், சவுக்கு சங்​கர் மீதான குண்​டர் சட்​டத்தை தமிழக அரசு கடந்த புதன்​கிழமை (20ந்தேதி)  ரத்து செய்து உத்​தர​விட்​டது. இதையடுத்​து, சவுக்கு சங்​கர் சிறை​யில் இருந்து  விடுவிக்​கப்​பட்​டார்.

சிறையில் இருநது வெளியே வந்த அவர் செய்​தி​யாளர்​களை சந்தித்தார். அப்போது,  திமுகவை மக்​களே தூக்கி எறிந்து விட்​டனர். கொளத்​தூரில் மு.க.ஸ்​டா​லினை தோல்​வி​யுற செய்​ததன் மூலம், மக்​கள் அற்​புத​மான தீர்ப்பை வழங்​கி​யுள்​ளனர்.

வழக்​க​மாக ஆலோ​சனை வாரி​யத்​துக்கு சென்று ஆஜரான பிறகு, குண்​டர் தடுப்​புச் சட்​டத்தை ரத்து செய்​தால், அந்த உத்​தரவு சிறைக்கு வந்து சேர 10 நாட்​களுக்கு மேல் ஆகும். என் விவ​காரத்​தில் கடந்த திங்​கட்​கிழமை  (மே 18ந்தேதி) ஆலோ​சனை வாரி​யத்​துக்கு முன்பு ஆஜரானேன். தொடர்ந்து புதன்​கிழமை (மே 20ந்தேதி)  தமிழக அரசு குண்​டர் தடுப்பு சட்​டத்தை ரத்து செய்​து, அதற்​கான அரசாணையை சிறைக்கு அனுப்​பியது. உடனே நான் சிறை​யில் இருந்து விடு​விக்​கப்​பட்​டேன்.

முதல்​வர் விஜய்யே இவ்​விவ​காரத்​தில் தலை​யிட்​ட​தால் இது சாத்​தி​ய​மானது. இதற்​காக முதல்​வர் விஜய்க்​கும், நீதி​மன்​றங்​களுக்​கும் நன்​றி.

இவ்​வாறு ​ கூறி​னார்​.

[youtube-feed feed=1]