சென்னை: தவெக பதவி ஏற்றதும், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்மிஸ் ஸ்தலங்கள்அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. அதன்படி சுமார் 717 கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்க முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த கடையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், முதல்வராக விஜய் பதவி ஏற்றதும், 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பள்ளி, பேருந்து நிலையம், வழிபாட்டு தளங்களுக்கு 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள கடைகளை மூடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 717 கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அந்த ஊழியர்களுக்கு வேலை இழக்கும் நிலையானது உருவானது இந்த நிலையில் மாற்றுப்பணி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் (டாஸ்மாக்) தமிழக அரசாணையின் அடிப்படையில் மூடப்பட்ட மதுபான கடைகளில் பணிபுரியும் சில்லறை விற்பனை பணியாளர்களை பணி நியமனம் தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தமிழக அரசு கல்வி நிலையங்கள் பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள 717 கடைகளில் கூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த கடைப்பணியாளர்களை பணிமூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து, மூடப்பட்ட கடைகளுக்கு அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை கூடுதல் ஏற்படும் மதுபான கடைகளில் மூடப்பட்ட கடைப்பணியாளர்களை பணிமூப்பின் அடிப்படையில் பணிநிரப்பிட செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூடப்பட்ட கடைப்பணியாளர்களில் எஞ்சிய பணியாளர்களை காலி பணியிடம் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிநிரவல் செய்திடவும், மீதமுள்ள பணியாளர்கள் கையிருப்பில் இருந்தால் அப்பணியாளர்களை கிடங்கு பணிகளிலும் மாவட்ட அலுவலக பணிகளிலும் இப்பணியாளர்களை பணிநிரப்ப செய்திட வேண்டும் என அறிவுறுத்தி அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]