சென்னை: நடப்பாண்டின் ஐபிஎல் கிரிகெட் போடடியில், 63வது லீக் போட்டி இன்று சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்றாமல் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதனால் வாழ்வா, சாவா என்ற கட்டாய வெற்றி நோக்கத்தில் இன்று சிஎஸ்கே அணி எஸ்ஆர்எச் அணியை எதிர்கொள்கிறது
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் இடையே போட்டி நடைபெற உள்ளது. இன்று தொடங்க உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான மிக முக்கியமான ஆட்டத்தில், சிஎஸ்கே அணியும், வெற்றிபெற வேண்டிய நோக்கத்தில் களமிறங்குகிறது.

இதனால் பெரும் எதிர்பாப்பை ஏற்படுத்தி உள்ள இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தலைவர் தோனி களம் இறங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகினற்ன. அதை சூசகமாக சொல்லும் வகையில் தோனி வலைப்பயிற்சியில் சில சமிக்ஞைகளை காட்டினார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி போட்டி என்பதால், தோணி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஐ.பி.எல். 2026-ன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பரபரப்புக்கு இடையில் ஆர்.சி.பி. முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மற்ற 3 இடங்களுக்கு பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், சி.எஸ்.கே. அணிகளும் உள்ளன.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 12 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. சி.எஸ்.கே. 12 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றால், 13 வெற்றிகளுடன் ஏறக்குறைய பிளேஆஃப் சுற்றை உறுதி செய்யும். இல்லையெனில் கடைசி போட்டியில் ஆர்.சி.பி.-ஐ கட்டாயம் வீழ்த்தியே ஆக வேண்டும்.
அதேவேளையில் இன்று சி.எஸ்.கே. தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மங்கிவிடும். கடைசி போட்டியில் குஜராத்தை வீழ்த்தி 7 வெற்றிகளுடன் வாய்ப்புள்ளதா? என காத்திருக்க வேண்டும். ஆகவே, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் சி.எஸ்.கே. உள்ளது.
சிஎஸ்கே அணியின் சொந்த மைதானத்தில் இன்று போட்டி நடைபெறுகிறது அதனால் இன்றைய வெற்றியை தனதாக்கிக் கொள்ள சிஎஸ்கே முனைப்பு காட்டும். ஓவர்டன் அணியில் இல்லாதது பெரிய இழப்பாகும். பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சாம்சன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இதனால் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]