சென்னை: வெற்று விளம்பரத்துக்காகவே சாதி, மதமற்றவர் சான்றிதழ் பெறப்படுகிறது என நடிகர் பார்த்திபன் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நடிகரும், இயக்​குநரு​மான ஆர். பார்த்​திபன் தனக்கு சாதி, மதமற்​றவர் என சான்​றிதழ் வழங்க சோழிங்​கநல்​லூர் வட்​டாட்​சி​யருக்கு உத்​தர​விடக்​கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிபதி எம். தண்​ட​பாணி, சாதி, மதமற்​றவர் என நடிகர் பார்த்​திபனுக்கு சோழிங்​கநல்​லூர் வட்​டாட்​சி​யர் சான்​றிதழ் வழங்க உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்த ​நிலை​யில், இந்த வழக்கு நீதிபதி எம்​.தண்​ட​பாணி முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நேரில் ஆஜரான நடிகர் பார்த்​திபன், ‘‘எனக்கு சாதி, மதமற்​றவர் என சோழிங்​கநல்​லூர் வட்​டாட்​சி​யர் சான்​றிதழ் வழங்கி விட்​டார். அர்த்​த​முள்ள ஒரு சமு​தா​யம் உரு​வாக வழி வகுத்​தமைக்கு நன்​றி’’ என்​றார்.

அதற்கு பதில் அளித்த நீதிப​தி, ‘‘தான் சாதி, மதமற்​றவர் என்​பதை நிரூபிக்க சான்​றிதழ் அவசி​யம் இல்​லை. சாதி, மதமற்​றவர் என்​பதை மனதா​ரப் பின்​பற்றி நடத்தை மூல​மாக வெளிப்​படுத்​தி​னாலே போதும்.  இது​போல உங்​களுக்கு சான்​றிதழ் வழங்க வட்​டாட்​சி​யர்​களுக்கு அதி​காரம் இல்​லை. அவ்​வாறு சான்​றிதழ் வழங்​கி​னால் அது வெற்று விளம்​பரத்​துக்​குத்​தான் பயன்​படும்.

ஆனால் ஏற்​கெனவே இரு நீதிப​தி​கள் அடங்​கிய அமர்வு பிறப்​பித்த உத்​தர​வின் அடிப்​படை​யில் சான்​றிதழ் வழங்க உத்​தர​விட்​டேன்’’ என்​றார்.

அதையடுத்து நடிகர் பார்த்​திபன், “இப்​போதெல்​லாம் நல்​ல​வர்​கள் எனக் கூறு​வதற்கு கூட சான்​றிதழ் தேவைப்​படு​கிறது. என்​ன​தான் நடத்தை மூல​மாக வெளி்ப்​படுத்​தி​னாலும், இது​போன்ற சான்​றிதழ்​கள் மற்​றவர்​களுக்​கும் முன்​மா​திரி​யாக இருக்​குமே” என்​றார்.

அதையடுத்து நீதிப​தி, வழக்கை முடித்​து​வைத்து உத்​தர​விட்டார்.

[youtube-feed feed=1]