சென்னை: அதிமுக இதுவரை பலமுறை உடைந்து சிதறியுள்ள நிலையில், தற்போதுள்ள அதிமுகவும் உடையும் நிலை உருவாகி உள்ளது.
எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சிவிசண்முகம் உள்பட முக்கிய தலைவர்கள் தலைமையில், அதிமுகவின் ஒருதரப்பு எம்எல்ஏக்கள் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்டுள்ளனர். இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 108 இடங்களை கைப்பற்றிய தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது. ஆனால், அதை ஏற்க மறுத்த கவர்னர் அர்லேகர், பெரும்பான்மைக்கான ஆவணங்களை தாக்கல் செய்தால் மட்டுமே முதல்வராக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும் என்று கூறி உள்ளார். இதனால், முதலமைச்சராக விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
இதனால், ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை இந்நிலையில் தவெக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக லால்குடி அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் கூறினார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பானது. இதற்கு எடப்பாடி தரப்பு மறுப்பு தெரிவித்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சிவிசண்முகம் உள்பட சிலர் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று மாலை, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்துரு, தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இல்லத்திற்கு வந்த எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் இபிஎஸ் இல்லத்துக்கு காரில் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில் தவெக தலைவர் விஜய் சார்ப்பில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னை கீரின் வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை தவெக தரப்பு மறுத்தது. தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க 11 பேரின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சி திமுக உடனான உறவை முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. இதனால், தவெகவின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, தங்களுக்கு ஆதரவு அளிக்கக் கோரி தவெக சார்பில் இடதுசாரிகள், விசிகவுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த கட்சிகள் திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன.
இந்த நிலையில் பரபரப்புக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்க ளின் பட்டியலை வழங்கினார். ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால் விஜய் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க உள்ள தாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவின. இது அரசியல் ஆர்வலர்களால் உற்று நோக்கப்பட்டது. ஆனால், அது வதந்தி என்பது தெரிய வந்தது. திமுக, அதிமுக தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏக்கள் பலர் சிவி சண்முகம் தலைமையில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இவர்கள் சுமார் 27 பேர், புதுச்சேரயில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில், சி.வி.சண்முகம், ஓ.எஸ். மணியன், தளவாய் சுந்தரம், மோகன், அருள்மொழி தேவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசலம் உள்ளிட்ட 27 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டுள்ளதாக கூறப்படகிறத. இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், அதிமுக மீண்டும் உடையும் நிலை உருவாகி உள்ளது. அதிமுகவில் தற்போது வெற்றிபெற்றுள்ள 47 எம்எல்ஏக்களில், 27 பேர், சிவி சண்முகம் தலைமையில் தனி அணியாக உருவெடுத்துள்ளதால், அரசியல் களம் தகதகவெக தகிக்கத்தொடங்கி உள்ளது. இதனால் எடப்பாடி செய்வதறியாது திகைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் சிவி சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள், தவெக தலைவர் விஜய்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. மேலும் சில தகவல்கள், இவர்கள் தேவெகவில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது.
[youtube-feed feed=1]