‘சென்னை: அமைச்சர் கனவில் இருக்கும் தவெக எம்எல்ஏக்களுக்கு அறப்போர் இயக்கம் செக் வைத்துள்ளது.

தேர்தலுக்கு முன்பு மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட எடுக்க மாட்டோம் என்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள்,  உறுதிமொழி எடுத்துள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில்,  ஊழலில் சிக்கியுள்ள ‘ஆர்.எஸ் முருகன் போன்றவர்களை அமைச்சர் ஆக்கிடாதீங்க’ என தவெக தலைவர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல ஊழல் பெருஞ்சாளிகள் தவெக எம்எல்ஏக்களாகி உள்ள நிலையில், விஜயால் எப்படி ஊழலற்ற ஆட்சி அமைக்க முடியும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில். அதிக தொகுதிகள் வெற்றி பெற்ற த.வெ.க கூட்டணியுடன் ஆட்சி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், இவருக்கு அறப்போர் இயக்கம் முக்கிய கோரிக்கையை வைத்துள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள், நேற்று (மே 4) எண்ணப்பட்ட நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை என்பதால், மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கி விஜய் காத்துக்கொண்டு இருக்கிறது.

தற்தைய நிலையில், காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில், அடுத்து தேவைப்படும் 7 எம்.எல்.ஏக்கள் ஆதரவு யாரிடம் இருந்து கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. திமுக, அதிமுக ஆதரவு தர முடியாது என்று கூறியுள்ள நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதுபோல அதிமுக கூட்டணி கட்சிகளில் பாமக தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்தாலும், தவெக பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையே உள்ளது.

இதற்கிடையில், தவெக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அவரது   அவரது அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. இது தொடர்பாக பல பட்டியில் வெளியாகி வரும்  நிலையில். இவரை மட்டும் அமைச்சர் ஆக்கிவிடாதீர்கள் என்று அறப்போர் இயக்கம் ஒருவரை குறிப்பிட்டு த.வெ.க தலைவர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளது,

இதுகுறித்து அறப்போர் இயக்கம் ஜெயராமன் வெளியாகியுள்ள வீடியோ பதிவில், நாங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அவர்கள் செய்த ஊழலை எதிர்த்து பேசினோம். அதேபோல் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும் அதை சரியாக செய்தோம். அவர்கள் செய்த ஊழலை எடுத்து கூறினோம். ஆனால் பலரும் புதிய கட்சியான த.வெ.க வுக்கு ஏன் ஆதரவு தரவில்லை என்று எங்களிடம் கேட்கிறார்கள். அறப்போது இயக்கம் தேர்தல் அரசியல் இல்லாத ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

த.வெ.க தேர்தலுக்கு முன்பு மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட எடுக்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துள்ளனர். இதை காப்பாற்ற வேண்டும் என்றால், ஊழல் முத்திரை இல்லாதவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும். அப்படி பார்த்தால், திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்.எஸ்.முருகன் குவாரியில் ஊழலில் சிக்கி, அபராதம் விதிக்கப்பட்டவர். அவரது மனைவி பெயரில் இந்த குவாரி இயங்கி வருகிறது. அவரைப் போன்றவர்களை அமைச்சராக ஆக்க வேண்டாம் என்பதே த.வெ.கவுக்கு அறப்போர் இயக்கம் சார்பில் வைக்கும் கோரிக்கை என்று குறிப்பிட்டுள்ளனர்

[youtube-feed feed=1]