சென்னை: தமிழகத்தில்  வாக்குப்பதிவில்  நிகழ்ந்த  வரலாற்று சாதனை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தன எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,  2026 தமிழக சட்டமன்ற தேர்தல், ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு! மே 4 தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

#TNElections2026 ஜனநாயகத் திருவிழா:

சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!  எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.  84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.  சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர்.

 “ஒரு வாக்குதானே” என எண்ணாமல், “ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது” என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.  தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!

எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல். 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர்.

“ஒரு வாக்குதானே” என எண்ணாமல், “ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது” என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு பதிவு இயந்திரங்களை சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]