சென்னை:  தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பறக்கும் படை  மற்றும் கண்காணிப்பு குழுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி மார்ச் 15ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால், அதிக பட்சமாக ரூ.50ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இன்றி  பணம்கொண்டு சென்றவர்களிடம் இருந்து பணம் பறிமுதல்   செய்யப்பட்டது. மேலும், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 23) வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.  அதன் அடிப்படையில் பணப்பட்டுவாடாவை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால்  இன்றுமுதல் பொதுமக்கள் பணம் கொண்டு செல்வதில் எந்த சிக்கலும் எழாது என்பது தெரிய வந்துள்ளது.

[youtube-feed feed=1]