சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தின் தலைமைச் செயலரை தேர்தல் ஆணையம் மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தின் தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் ஆட்சியாளர்களின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், காவல்துறை உயர்அதிகாரிகள், தலைமைச்செயலாளர் முருகானந்தம் உள்பட பல உயரதிகாரிகளும் மாற்றப்பட்டனர்.
இநத் நிலையில், தலைமைச் செயலா் முருகானந்தம் மாற்றத்தை எதிர்த்து, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சோ்ந்த வீராசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், கடந்த ஏப். 8-ஆம் தேதி தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தம் மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலராக எம்.சாய்குமாரை நியமனம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவா், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலராகப் பணியாற்றியவா்.
தோ்தல் நேரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலராக சாய்குமாரை நியமிப்பது ஏற்புடையதல்ல. அவரது நடுநிலை குறித்த அச்சம் எழுந்துள்ளதால் அவரை மாற்ற வேண்டும் என தோ்தல் ஆணையத்திடம் மனு அளித்தேன். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாய்குமாரை தலைமைச் செயலராக நியமித்து தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்..
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் ஏப்ரல் 22ந்தேதி விசாரணைக்கு வந்தது. தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்
[youtube-feed feed=1]