சென்னை: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் ரூ. 7.36 கோடி முதலீடு செய்துள்ளதை தனது வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தகவல் தெரிவித்துள்ளது.
திமுக சார்பில், மீண்டும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், தனது வேட்புமனுவில், கடந்த 2021-ல் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தில் அவர் முதலீடு செய்திருந்த ரூ. 7.36 கோடி விவரங்களை, 2026 தேர்தல் வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை, அது விடுபட்டுள்ளது என்று வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற நாளை (ஏப்ரல் 23-ம் தேதிஸ்ரீ) ஒரே கட்டமாக நடைபெற3 உள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது இன்று முதல் வாக்குப்பெட்டிகள் உள்பட அனைத்தும் அனுப்பும் பணி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், துணை முதல்வரும், தி.மு.க இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக அவர் தாக்கல் வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டு இருந்தார். அதில், தனது கையில் ரொக்கமாக ரூ.50 ஆயிரமும், தனது மனைவியிடம் ரூ.75 ஆயிரமும் இருப்பதாகவும், தன்னிடம் இருக்கும் மொத்த அசையும் சொத்தின் மதிப்பு சுமார் ரூ.12.92 கோடி என்றும், தனது மனைவி கிருத்திகாவிடம் இருக்கும் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.13.25 கோடி என்றும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தன்னிடம் இருக்கும் அசையா சொத்தின் மதிப்பு ரூ.7.72 கோடி என்றும், சொந்தமாக தங்கம் எதுவும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
தனது மனைவியிடம் சுமார் ரூ.1.88 கோடி மதிப்புள்ள 1,600 கிராம் பழைய தங்க நகைகள் இருப்பதாகவும், தனக்கு சொந்தமாக ரூ.23 லட்சம் மதிப்பிலான ஒரு இனோவா காரும், ரூ.1 கோடி மதிப்பிலான டிபெண்டர் காரும் இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான ஆர். குமரவேல் என்பவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ள சொத்துக்கள் குறித்து, வருமான வரித் துறை தலைமை இயக்குநர் (புலனாய்வு) மற்றும் மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவை விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறியிருந்தார்.
மேலும், “கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன் ரூ.2 கோடி ரூபாய் வருமானம் இருந்ததாக குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது ரூ.10.98 கோடி வருமானம் உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். வருமானம் மற்றும் சொத்து அதிகரித்ததாக கூறுவது குறித்து உரிய விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித் துறைக்கும், கார்ப்பரேட் விவகாரத் துறைக்கும் உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று (ஏப்ரல் 21ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வருமான வரித்துறை தரப்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி (விசாரணை) தலைமை இயக்குநர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த இடைக்கால அறிக்கையில், ‘உதயநிதி ஸ்டாலின் 2021-ல் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தில் செய்திருந்த ரூ. 7.36 கோடி முதலீடு, அவரது 2026 தேர்தல் வேட்புமனுவில் (பிரமாணப் பத்திரம்) இருந்து விடுபட்டுள்ளது.
அதே சமயம், 2026 வேட்புமனுவில் அவரது மனைவியின் பெயரில் அதே நிறுவனத்தில் ரூ. 2.63 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதும், அது முன்னர் தெரிவிக்கப்படவில்லை என்பதும் காட்டப்பட்டுள்ளது. தேர்தல் பிரமாணப் பத்திரங்களுக்கும் நிதிப் பதிவுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் இருக்கிறது. ஆனால், தற்போது எந்தவொரு உறுதியான முடிவையும் எடுக்க முடியாது என்று வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், ‘2026-ஆம் ஆண்டின் பிரமாணப் பத்திரத்தில் ரூ 10 கோடி அளவிலான கடன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டின் பிரமாணப் பத்திரத்திலோ சுமார் ரூ. 11.06 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், நிறுவனத்தின் நிதிநிலை ஆவணங்கள் சுமார் ரூ. 17.69 கோடி அளவிலான கடன்களைக் காட்டுவதாக உள்ளன. விரிவான ஆவணங்கள் இல்லாமல் துல்லியமான புள்ளிவிவரங்களை நிர்ணயிக்க இயலாது. வருமான வரித் தாக்கல் ITR-2 வடிவத்தில் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வடிவத்தில் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இதன் விளைவாக, முதலீடுகளைச் சுயச்சார்பாகச் சரிபார்க்க இயலாத நிலை உள்ளது. முக்கியமான ஆவணங்கள் உடனடியாகக் கிடைக்கக் கூடிய நிலையில் இல்லை. சில நிறுவனங்களுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை ஆவணங்கள் விடுபட்டுள்ளடது. தொடர்புடைய நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கலை ஸ்டாலினின் துணைவியார் மேற்கொள்ளவில்லை. எனவே, மேலும் ஆதாரங்களை சேகரிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வருமான வரித்துறைக்கு 4 வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
[youtube-feed feed=1]