சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 21ந்தேதி முதல் 3 நாட்கள் 10ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 23 தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் வசதியாக சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கப்படுகின்றன.
தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் வசதியாக சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் (Special Buses) 3 நாட்களுக்கு இயக்கப்படுகின்றன. அதன்படி, போக்குவரத்துத் துறை சார்பில் 10,663 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. ஏப்ரல் 21ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, செல்லும் ஊர்களுக்கு ஏற்ப பேருந்து நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்விவரங்கள் பின்வருமாறு.
கிளாம்பாக்கம் (KCBT) – புறநகர் முனையம்:
திருச்சி, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, கடலூர், சிதம்பரம் மற்றும் புதுச்சேரி.
கிளாம்பாக்கம் (KCBT) – மாநகர முனையம் (MTC): திருவண்ணாமலை, போளூர் மற்றும் வந்தவாசி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.
கோயம்பேடு (CMBT):
காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர், திருத்தணி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாகச் செல்லும் பேருந்துகள்.
மாதவரம் புதிய பேருந்து நிலையம்:
ஆந்திர மாநிலம் (பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழி) மற்றும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் வழக்கமான பேருந்துகள். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற பேருந்து நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் இணைப்புப் பேருந்துகள் (Link Buses) இயக்கப்படும்.
பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC Official App மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்து இயக்கம் குறித்த சந்தேகங்களுக்கு 94450 14436 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் மூலம் பேருந்து இயக்கம் கண்காணிக்கப்படும். வாக்காளர்கள் அனைவரும் உரிய நேரத்தில் தங்கள் ஊர்களுக்கு சென்று ஜனநாயக கடமையாற்றத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
[youtube-feed feed=1]