சென்னை: மக்களுக்கு எந்த இலவசமும் கொடுக்க தேவையில்லை.. மக்கள் என்ன பிச்சைக்காரர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பிய சீமான் ஆவேசம், தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தாலிக்கு ஒரு சவரன் தங்கம் இலவசம் என்ற திட்டத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தாலிக்கு தங்கம் ஒரு திட்டமா? என கேள்வி எழுப்பியவர், மனைவிக்கு ஒரு பவுன் தங்கத்தில் தாலி வ6ங்க முடியாத உனக்கெதுக்கு கல்யாணம்?!.. செத்துப்போலாம்… என சீமான் ஆவேசமாக தெரிவித்தார். மேலும், பொருளாதாரம் என்னவென்று தெரியாத வர்களிடம் ஆட்சியை கொடுத்து விட்டு இப்போது படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்றர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் இலவசங்களை சரமாரியாக அறிவித்து வருகின்றன. ஆனால், இந்த இலவசங்கள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து வாங்கப்படுகிறது என்பது தெரியாமல், பொதுமக்கள் இலவசத்துக்கு மயங்கி, சிந்திகாமல் தங்களது வாக்கினை விற்பனை சய்து வருகின்றனர். இந்த விஷயத்தல், திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளையும் மிஞ்சும் வகையில், த வெக இலவசங்களை அறிப்புகளை தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு,, தமிழர்களை முட்டாளாக்கி உள்ளது.
பெண்களுக்கு மாதம் ரூ.2500, வருடத்துக்கு 6 சிலிண்டர் இலவசம், திருமணமாகாத பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் , 200 யூனிட் மின்சாரம் இலவசம் என உள்பட பல்வேறு அதிரடி இலவச அறிவிப்புகளை தவெக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நாதக தலைவர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களை கடுமையாக எதிர்த்து வரும் சீமான், இலவசங்கள் வேண்டாம், மாறாக தரமான கல்வி, மருத்துவம் மற்றும் தூய குடிநீர் ஆகியவற்றை அடிப்படை உரிமைகளாக வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்துகிறார். இலவசங்களை அறிவிப்பது கேடு கெட்ட ஆட்சிமுறை என்றும், இலவசம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதாகவும் சாடுமையாக சாடி வருகிறார்.
இலவசங்கள் ஒரு வீழ்ச்சித் திட்டம் என்றும், அவை மக்களை சோம்பேறிகளாக்குவதாகவும் அவர் கருதுகிறார். பிரதமர் மற்றும் முதலமைச்சருக்குக் கிடைக்கும் அதே அளவிலான மருத்துவம் மற்றும் கல்வியை மக்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், தேர்தல் பரப்புரையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாலிக்கு தங்கம் என்பதை கடுமையாக விமர்சித்து பேசினார்.
நாதக ஆட்சிக்கு வந்தால், ‘எதுவும் இலவசம் கிடையாது.. தாலிக்கு தங்கம் கண்டிப்பாக தரமாட்டேன்… காலம் முழுவதும் உன்னுடன் வாழவரும் ஒரு பெண்ணுக்கு ஒரு பவுனில் தாலி கூட வாங்கி கட்ட முடியாது என்றால் உனக்கு கல்யாணம் தேவையில்லை.. அதுக்கு நீ செத்துப் போகலாம்’ என அதிரடியாக பேசியிருக்கிறார்..
மக்களுக்கு எந்த இலவசமும் கொடுக்க தேவையில்லை.. அவர்கள் என்ன பிச்சைக்காரர்களா?.. கையேந்தி இலவசங்களை வாங்க முடியாத அளவுக்கு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதுதான் ஒரு நல்ல அரசு’ என கூறினார்.
[youtube-feed feed=1]