சென்னை: திமுக ஆதரவில் எம்.பி. பதவி பெற்ற மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில், தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

திமுக ஆதரவில் மாநிலங்களவை எம்.பி.யான கமல்ஹாசன், இந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து, முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த நிலையில், தற்போது சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
அதன்படி, இன்று சென்னையில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன்படி, இன்று (17-ம் தேதி) அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மற்றும் துறைமுகம், திருவிக நகர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.
இதையடுதது, நாளை (18-ம் தேதி), தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளிலும், 19-ம் தேதி அவிநாசி, கோவை தெற்கிலும், 20-ம் தேதி திருச்சி கிழக்கு, ரங்கம், லால்குடி ஆகிய தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்கிறார்.
[youtube-feed feed=1]