விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் ரிலீசாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தங்களுக்கு தெரியாமல் படம் ரிலீஸ் ஆனது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக சிலரைப் பிடித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் படக்குழு தரப்பில் இருந்தே கசிய விட்டது அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து முக்கிய குற்றவாளியான ப்ரீலேன்ஸ் (ஒப்பந்த அடிப்படையிலான) உதவி படத்தொகுப்பாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், படத்திருட்டு தொடர்பாக சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணைக்காக ஏற்கனவே கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட மொத்தம் 9 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேலும் விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளதை அடுத்து ஜனநாயகன் படம் கசிந்தது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல் வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]