டெல்லி: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியானது. இத்தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.70 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
CBSE 10th Result 2026 OUT: 2026 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது DigiLocker மற்றும் UMANG மொபைல் செயலிகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மத்திய கல்வி வாரியம் (CBSE) 2026 ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் தற்போது DigiLocker மற்றும் UMANG மொபைல் செயலிகளில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை ஆன்லைனில் எளிதாக பார்க்க முடியும்.
10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 முதல் மார்ச் 11, 2026 வரை நடைபெற்றன. 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்கள் ஒட்டுமொத்தமாகக் குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்த நிலையில், CBSE 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியானது. : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ஆம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளை இன்று, ஏப்ரல் 15, 2026 அன்று மாலை வெளியிட்டுள்ளது. இத்தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.70 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வை எழுதிய மாணவர்கள், தற்போது results.cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்கள் தேர்வு முடிவுகளைச் சரிபார்த்துப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த ஆண்டு 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியிருந்தனர். இதில், 2லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று உள்ளனர்
தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட மாணவிகளே முன்னிலை வகித்துள்ளனர்; மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.69 சதவீதமாக இருந்த நிலையில், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.99 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், மொத்தம் 2,21,574 மாணவர்கள் (8.96 சதவீதம்) 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களையும், 55,364 மாணவர்கள் (2.24 சதவீதம்) 95 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து முன்னிலை வகிக்கின்றனர்., மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.69 சதவீதமாக இருந்த நிலையில், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.99 சதவீதமாகப் பதிவானது.
இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில், மொத்தம் 2,21,574 மாணவர்கள் (8.96 சதவீதம்) 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றனர்; அதேவேளையில், 55,364 மாணவர்கள் (2.24 சதவீதம்) 95 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனை படைத்தனர்.
10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 முதல் மார்ச் 11, 2026 வரை நடைபெற்றன. 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்கள் ஒட்டுமொத்தமாகக் குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முடிவுகளை எங்கு பார்க்கலாம்? (CBSE 10th Result 2026 announced)
CBSE 10th Result 2026 தற்போது பல்வேறு அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கிடைக்கிறது. மாணவர்கள் கீழ்க்கண்ட தளங்களில் தங்கள் முடிவுகளை சரிபார்க்கலாம்:
மேலும், இணைய வசதி இல்லாத மாணவர்களுக்காக SMS மூலமாகவும் முடிவுகளை அறியும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
DigiLocker மற்றும் UMANG மூலம் எளிதாக பார்க்கலாம்
DigiLocker மற்றும் UMANG போன்ற அரசு அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மூலம் மாணவர்கள் தங்கள் மார்க் ஷீட்டை நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த முறைகள் பாதுகாப்பானதும், விரைவானதும் ஆகும்.
பிரஸ் மீட் இல்லை – ஆன்லைனில் மட்டும் அறிவிப்பு
இந்த ஆண்டில் CBSE வாரியம், 10ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிட எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தவில்லை. அதன் பதிலாக, அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், பாலின வாரியான விவரங்கள், மாநில வாரியான செயல்திறன் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அனைத்தும் இணையதளங்களில் வெளியிடப்படும்.
முன்னதாக, 2026 ஆம் ஆண்டு CBSE 10ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் மார்ச் 11 வரை நடைபெற்றது. அனைத்து தேர்வுகளும் ஒரே நேர அட்டவணை யில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு, லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்றனர்.
ரிசல்ட் பார்ப்பது எப்படி?
CBSE 10th Result பார்க்க அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
“CBSE Class 10 Result 2026” லிங்கை கிளிக் செய்யவும்
உங்கள் Roll Number, School Number உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்
Submit செய்தவுடன் உங்கள் மதிப்பெண்கள் திரையில் தோன்றும்
அதை Download செய்து Print எடுக்கவும்
மாணவர்கள் தங்கள் மார்க் ஷீட்டை சரியாக சரிபார்க்க வேண்டும். ஏதேனும் தவறுகள் இருந்தால், உடனடியாக பள்ளி நிர்வாகம் அல்லது CBSE வாரியத்தை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், அதிகாரப்பூர்வ தளங்களிலேயே முடிவுகளை பார்க்க வேண்டும். போலியான இணையதளங்களை தவிர்க்க வேண்டும்.
[youtube-feed feed=1]