சென்னை: சென்னை ஓட்டேரி பகுதியில் காதலியின் தங்கையான  14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது. அக்காவின் காதலனே இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலியின் தங்கையான 14வயது  சிறுமியை தனது அக்கா வீட்டிற்கு அழைத்துச் சென்ற சிலம்பரசன்,  அங்கு அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

விசாரணையில்,  சென்னை ஓட்டேரியில் பள்ளி மாணவியான 14 வயது சிறுமியை, அந்த சிறுமியின் அக்காவை காதலித்து வந்த சிலம்பரசன் என்பவன், , சிலம்பரசன் தனது காதலியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். வருங்கால மருமகன் என்ற முறையில் குடும்பத்தினரும் அவரை நம்பி பழகி வந்துள்ளனர்.  அக்காவை காதலித்துக்கொண்டே அவரிடம் அன்போடு பழகிய  காதலியின்  தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இந்த சம்பவம்  தொடர்பாக சிலம்பரசனை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவியைப் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வதாகக் கூறி, சிலம்பரசன் தனது சகோதரி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து, 14 வயது சிறுமி என்றும் பாராமல் ஆசை வார்த்தைகளைக் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, தனது அக்காவின் காதலன் சிலம்பரசன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதை அழுதுகொண்டே மாணவி தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு நிலைகுலைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், சிலம்பரசன் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலியின் தங்கையையே வன்கொடுமை செய்த இளைஞரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது! சொல்கிறார் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார்

[youtube-feed feed=1]