சென்னை: கிரிஸ் சோடங்கர் நல்லா இருக்காரு. ஆரோக்கியமா இருக்கிறார்!  அவர் படிக்கட்டில் சிலிப்பாகி கீழே விழுந்தார் என்று செல்வபெருந்தகை கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கள் விழுந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலைல், கிரிஸ் சோடங்கர், அவர் நல்லா இருக்காரு. ஆரோக்கியமா இருக்கிறார் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் சம்பந்தமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,  சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற் கிரிஸ் சோடங்கர் மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் பரபரப்பினை கிளப்பியது. அவர் தள்ளி விடப்பட்டாரா அல்லது வேறு காரணமாக என கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், கிரிஷ் சோடங்கர்  நல்லா இருக்காரு. ஆரோக்கியமா இருக்கிறார். தொலைக்காட்சியில் வந்ததெல்லாம் தவறான செய்தி என்றவர், அவர்  படியில் இருந்து இறங்கும்போது கால் ஸ்லிப்பாகி  விழுந்துட்டாரு. இதுதான் நடந்த விஷயம் என விளக்கம் அளித்தார்.

மேலும், இந்த முறை யாரெல்லாம் போட்டியிட போகிறார்கள்  என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்க்ளுக்கு வாய்ப்பு அளிக்க படுமா அல்லது புதியவர்கள் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுமா, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும்   என்பது விரைவில் தெரியவரும் என்றார்.

இதுதுதொடர்பாலக இப்போதுதான் எல்லார்கிட்டயும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொகுதி பங்கீடு உடன்பாடும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவையனைத்தும் முடிந்த பிறகு எந்தெந்த தொகுதி என்பது அடையாளம் காணப்பட்டு, வேட்பாளர்கள் இறுதி செய்யப்படும். அதுகுறித்து பின்னர்,   உங்களிடம் சொல்லப்படும் என்றார்.

[youtube-feed feed=1]