சென்னை: நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறுவதுஉறுதியாகி உள்ளது.
திமுக , காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு என மொத்தம் 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்குகிறது. திமுக மட்டும் 172 தொகுதிகளில் களமிறங்கி, தனிப்பெரும்பான்மை யுடன் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.

ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் 4முனை போட்டி நிலவிவருகிறது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தது மேலும் பலத்தை அதிகரித்துள்ளது. இதனால் புதிதாக கட்சி தொடங்கி உள்ள தவெகவின் எதிர்ப்பை அசால்டாக சமாளிக்கும் வாய்ப்பு திமுக வுக்கு உருவாகி உள்ளதுடன், திமுக அணியின் வெற்றியும் உறுதிசெய்யப்பட்ட வெற்றியகவே பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு தேர்தல், திமுக கூட்டணி, அதிமுக – பாஜகவின் என்டிஏ கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் என நான் அணிகளை கொண்ட நான்குமுனை போட்டியாக உள்ளது.
திமுகவின் கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம், லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆம் ஆத்மி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, சமத்துவ மக்கள் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், கொங்கு இளைஞர் பேரவை, வல்லரசு பார்வர்டு பிளாக், , ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, புதிய திராவிடர் கழகம், தமிழர் தேசம் கட்சி, அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம், திராவிட தமிழர் கட்சி ஆகிய 26 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் பல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்த 26 கட்சிகளில் 16 கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரசுக்கு திமுக, 28 சட்டமன்ற தொகுதியையும், ஒரு மாநிலங்களவை சீட்டையும் ஒதுக்கி உள்ளது. . இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கடந்த முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட 3 தொகுதி களிலும் தோல்வி அடைந் தது. இந்த முறை அக்கட்சிக்கு ஒரு தொகுதி குறைக்கப் பட்டுள்ளது. கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 2 தொகுதி களிலும் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி அடைந்ததால் இந்த முறை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட வில்லை.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏணி சின்னத்திலும், மனிதநேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளன
மற்ற கூட்டணி கட்சிகளான தேமுதிக, விசிக, மதிமுக என கூட்டணியில் இடம்பெற்ற மற்ற பிரதான கட்சிகளுக்கு திமுக அடுத்தடுத்து எத்தனை சீட் என்று உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் ஓரிரு நாள்களில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.
புதிதாக தி.மு.க. கூட்ட ணியில் இணைந்துள்ள தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதி கள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வட தமிழகத்தில், விடு தலை சிறுத்தைகள் கட்சி மூலம் தலித் வாக்குகளையும், தே.மு.தி.க. மூலம் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட வாக்காளா்கள் மற்றும் பிற்பட்டோா் சமூக வாக்குகளை ஒருங்கி ணைத்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் உத்தியாகும்.
கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதி களில் போட்டியிட்ட ம.தி.மு.க., 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்போது தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டதால் 4 தொகுதிகள் மட்டும் ஒதுக் கப்படும் என தெரிகிறது.
கடந்த முறை தலா 6 தொகுதிகளில் போட்டி யிட்ட இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்டு ஆகியவை தலா 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. எனவே இந்த இரு கட்சிகளுக்கும் தலா 4 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக இணைந்த மக்கள் நீதி மய்யத்துக்கு டாா்ச் லைட் சின்னத்தில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கடந்த முறை உதயசூரியன் சின்னத் தில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதி யில் மட்டுமே வெற்றி பெற்றதால், இந்த முறை 2 தொகுதிகள் மட்டுமே உதயசூரியன் சின்னத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, மனிதநேய ஜனநாயக பேரவை, கொங்கு இளைஞா் பேரவை, முக்குலத்தோா் புலிப்படை, புதிய திராவிடா் கழகம் உள்ளிட்ட சில சிறு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் 172 தொகுதிகளில் வேட்பா ளர்கள் களம் இறக்கப்பட உள்ளனர். 62 தொகுதிகளில் தனி சின்னத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டி யிட உள்ளதாக தி.மு.க. வட் டாரத்தில் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக திமுக அணியில் சேர்ந்தது பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அதுபோல, ஓபிஎஸ் அணியும் திமுக அணியில் சேர்ந்துள்ளது, அதிமுகவின் வெற்றிவாய்ப்பை பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. அதுபோல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா புதிய கட்சியை தொடங்கி தனியாக களமிறங்குகிறார். இதனால் அதிமுக வாக்குகள் பிரியும் நிலை உருவாக்கி உள்ளது.
தமிழக தேர்தல் களம் தகதகவென தகிக்கத்தொடங்கி உள்ளது. இதற்கிடையில், தவெகவுக்கு திரளும் கூட்டத்தை பார்க்கும்போது மற்ற கட்சிகளின் மனதில் சிறு அச்சம் ஏற்பட்டு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. இருந்தாலும் திமுக அணி மாபெரும் வெற்றிபெரும் என்பதை மறுக்க முடியாது.
[youtube-feed feed=1]