சென்னை: தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையர் (SCIC) ஆக Md. ஷகீல் அக்தர், IPS (ஓய்வு) இருந்து வருகிறார். அவருடன் மேலும், P. தாமரைக்கண்ணன், IPS (ஓய்வு), R. பிரியகுமார், B.Sc., B.L., டாக்டர் K. திருமலைமுத்து, ICLS (ஓய்வு), டாக்டர் R. பிரதாப்குமார், M. நடேசன் & திரு. V.P.R. எலம்பரிதி ஆகியோர் தகவல் ஆணையர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமாா் சிங் ஆகியோா் மாநில தகவல் ஆணையா்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவா்கள் பதவியேற்ற நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பில் பணியாற்றுவாா்கள் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]