சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசால் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகையை நிறுத்த நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் ஆவேசமாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் பிப்ரவரி 19ந்தேதி விசாரணையின்போது, அரசியல் கட்சிகளின் இலவசங்களை கடுமையாக சாடியதுடன், நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக கூறிக்கொண்டு, தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில் சமூக நீதி என்ற பெயரில் பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?’ என்றும் கேள்வி எழுப்பியது. இதை சுட்டிக்காட்சி சமுக வலைதளங்களிலும் திமுக அரசுமீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மகளிர் உரிமை தொகையை நிறுத்த நினைத்தால் தமிழ்நாடே கொந்தளிக்கும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.
இடைக்கால பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதல் அளித்து இன்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நீதி அடிப்படையிலான திராவிட மாடல் அரசின் கொள்கைகள் நாட்டிற்கே வழிகாட்டுகிறது. பெரியார் வழியில் வந்த திராவிட மாடல் அரசு சமூகநீதியைக் காத்து நிலைநாட்டிட பாடுபட்டு வருகிறது. திராவிட மாடல் அரசானது சமூகநீதியை காப்பதற்காக என்றென்றும் போராடும் என்றவர், சமூகநீதிக்கு பங்கம் வரும்போதெல்லாம் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்கும் என்றார்.
மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். அந்த கொந்தளிப்பு இருக்கும்வரை தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆள்கிறார் என்றே அர்த்தம். *மகளிர் உரிமைத்தொகை திட்டமானது நாட்டிற்கே வழிகாட்டும் திட்டமாக உள்ளது. தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிருக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கி உள்ளார் முதலமைச்சர். ரூ.1000 கொடுப்பதை தடுத்து நிறுத்த நினைத்தால் ரூ.5000 கொடுப்பேன் என்கிறார் முதலமைச்சர் என்றவர், மெட்ரோ ரெயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதி தருவதை மத்திய பா.ஜ.க. அரசு நிறுத்தி வைத்துள்ளது என்று சாடினார்.
மேலும், தமிழ்நாடு பிற மாநிலங்களுடன் போட்டி போடவில்லை. வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தான் தமிழ்நாடு போட்டி போடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
”தேர்தலுக்கு சற்று முன்பு பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?’ உச்சநீதிமன்றம் கோபம்….
[youtube-feed feed=1]