டெல்லி: ”தேர்தலுக்கு முன்பு பணப் பரிமாற்றத் திட்டங்கள் ஏன்?” இலவசங்கள் ஏன் கொடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் ‘இலவச’ கலாச்சாரத்தால் தேசக் கட்டுமானம் தடைபட்டுள்ளது’ என்று கடுமையாக சாடியுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசு திடீரென பெண்களுக்கு ரூ.5000 இலவசமாக வழங்கியது பேசும்பொருளாக மாறிய நிலையில், அது உச்சநீதிமன்றத்திலும் விவாதப்பொருளானது.

தேர்தலின்போது வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் இலவசம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுகிறது. பணம், பொருட்கள் வழங்கி மக்களை ஏமாற்றி வெற்றி பெறுகிறது. இதனால்,அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை தடை செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மின்சார திருத்த விதிகள் 2024 இன் விதி 23 ஐ எதிர்த்து தமிழ்நாடு மின் விநியோக நிறுவனம் லிமிடெட் தாக்கல் செய்த ரிட் மனுவை இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜோய்மல்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
வழக்கின் விசாரணையின்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு, தேர்தல்களுக்கு சற்று முன்பு பல்வேறு மாநில அரசுகள் ‘இலவசங்களை’ அறிவிக்கும் போக்கை கடுமையாக சாடியது. இந்தப் போக்கு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இது நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் என்றும் கவலை தெரிவித்தார்.
விசாரணையின் போது, மின் கட்டணங்களை மாநிலம் ஏற்றுக்கொள்வது குறித்து தலைமை நீதிபதி கேள்விகளை எழுப்பினார். மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி காந்த், “பொது நலனுக்காக… அரசு இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொள்கிறதா? இலவசங்களால், முழு நாடும் ஏற்கனவே… குறிப்பாக தமிழ்நாட்டைப் பற்றிப் பேசவில்லை. நாங்கள் இந்தியா முழுவதும் பேசுகிறோம்.
நாம் என்ன மாதிரியான கலாச்சாரத்தை வளர்த்து வருகிறோம்? மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தும் திறன் கொண்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் இடையே என்ன வித்தியாசம்? ஒரு நலன்புரி அரசாக, ஒதுக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க விரும்புகிறீர்கள் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் கொடுக்கக்கூடியவர்களுக்கும் கொடுக்க முடியாதவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டாமல், நீங்கள் கொடுக்கத் தொடங்கினால், அது ஒரு வகையான சமாதானக் கொள்கையாக இருக்காதா?”எஙனறதங
மாநில சலுகைகளை தனிநபர்களுக்கு, வாங்கக்கூடியவர்களுக்கும் முடியாதவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாமல், பாகுபாடின்றி வழங்குவது திருப்திப்படுத்துவதைத் தவிர வேறில்லை என்றும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்றும் நீதிமன்றம் கூறியது.
