சென்னை: இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி  மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது என்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் தாயகம் திரும்பவும் மததிய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் எழுதியுள்ளார்.

 

[youtube-feed feed=1]