சென்னை: யாரும் எதிர்பாராத வகையில், இன்று திடீரென திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

தேமுக கட்சி தொடங்கியது முதல்  இதுவரை  திமுக கூட்டணியில் சேராத நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, முதன்முறையாக  சட்டமன்ற தேர்தலை சந்திக்கும்  தேமுதிக இநத முறையும் அதிமுக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் டிவிஸ்டாக இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்தார்.

பின்னர் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,  தொண்டர்களின் விருப்பத்துடன் தான் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். இக்கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.

இந்த முறை திமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என எங்களுடைய நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வலியுறுத்தினார்கள். அவர்களின் விருப்பப்படி கூட்டணி அமைத்துள்ளோம்.

கேப்டன் இல்லாத நேரத்தில்  இந்தகூட்டணி அமைந்திருக்கிறது.  இது 2016ம் ஆண்டே இது அமைந்திருக்க வேண்டிய கூட்டணி. அப்போதே கலைஞர் பழம் நழுவி பாலில் விழும் என்றார். அது 10 வருடம் கழித்து நடந்திருக்கிறது என  கூறியவர்,   234 தொகுதிகளும் தே.மு.தி.க.வின் களம்தான் என்றார்.

தமிழ்நாடு அரசியல் களத்தில் உள்ள  அனைவரும் தோழமை கட்சிகள் தான் என்றவர்,  பலரின் கற்பனைகளுக்கும் தே.மு.தி.க. இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றவர், வரவிருக்கிற சட்டசபை தேர்தலில் நானும் போட்டியிடுவேன் என்றவர், இக்கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க! வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பதிவு…

[youtube-feed feed=1]