சென்னை: மின்சார ரயில் சேவை குறைப்பு எதிரொலியால்,  கூடுதலாக 50பேருந்துகளை இயக்குவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், 20ந்தேதி முதல் 45 நாட்களுக்கு மின்சார ரயில்  வந்து செல்லும் பிளாம்பாரம் மாற்றப்பட்டு உள்ளதுடன் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 50 பேருந்துகளை இயக்குவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகர் போக்​கு​வரத்து கழகம் வெளி​யிட்ட செய்திக் குறிப்பில்,  எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரண​மாக சென்னை கடற்​கரை – தாம்​பரம் – செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் இயக்​கப்​படும் புறநகர் மின்​சார ரயில்​களின் சேவை​யில் வரும் பிப்​. 20 முதல் ஏப்​ரல் 5 வரை 45 நாட்​களுக்கு மாற்​றம் செய்யப்​பட்​டுள்​ளது.

மாநகர் போக்​கு​வரத்து கழகம் தற்​போது ராயபுரம் தற்​காலிக பேருந்து நிலை​யத்​தில் இருந்து தாம்​பரம், கிளாம்​பாக்​கம் வழி​யாக கூடு​வாஞ்​சேரி வரை இயக்​கப்​படும் தடம் எண். இ18-ல் 16 பேருந்​துகளும், கிளாம்​பாக்​கம் வரை இயக்​கப்​படும் தடம் எண்​. 18ஏ-ல் 28 பேருந்​துகள் என 44 பேருந்​துகள் தற்​போது இயக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், பிப்​.20 முதல் ஏப்​.5ம் தேதி வரை ராயபுரம் தற்​காலிக பேருந்து நிலை​யத்​தில் இருந்து 35 பேருந்​துகள் கிளாம்​பாக்​கம் வரை​யும், பல்​லா​வரத்​திலிருந்து தாம்​பரம் வழி​யாக செங்​கல்​பட்டு வரை 15 பேருந்​துகள் என மொத்​தம் 50 பேருந்​துகள் வழக்​க​மாக இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக இயக்​கப்பட உள்​ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பயணிகள் கவனத்திற்கு: 20ந்தேதி முதல் எழும்பூரில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் பிளாட்பாரம் மாற்றம்!

 

[youtube-feed feed=1]