சென்னை: சட்டப்பேரவையில் 7.5% இட ஒதுக்கீடு தொடர்பான அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசும்போது, அரசு மாணவர்களுக்கு மருத்துவம் உள்பட உயர் படிப்புகளில் சேர 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்து பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்த்து தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போதுஅதிமுக எம்எல்ஏக்கள், 7.5% இட ஒதுக்கீட்டை அதிமுக ஆட்சி காலத்தில் தாங்கள்தான் கொண்டு வந்ததாகக் கூறினர்.
. 7.5% இட ஒதுக்கீடுக்காக ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம் நடத்தி வலியுறுத்தியது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி மீண்டும் வலியுறுத்தினார்.
7.5% இடஒதுக்கீட்டை திமுக கொண்டுவர வலியுறுத்தியது என்பது தவறான தகவல். 7.5% இடஒதுக்கீட்டுக்கு திமுக போராடியதாக ஆதாரத்தை காட்ட முடியுமா? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யாரும் கேட்காமல் மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டை வழங்கியது. அதிமுக அரசு. ஆனால், திமுக அரசு, அதை சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறது.
ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம் நடத்தியதால் தான் 7.5% இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது என அமைச்சர் கூறியதற்கு, சட்டப்பேரவையில் பொதுச்செயலாளர் ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.
7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு
[youtube-feed feed=1]7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்! ஸ்டாலின்