சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், பிரதமர் மோடி,   மார்ச்1 மற்றும் 6ந்தேதி என  இருமுறை தமிழ்நாடு வருகை தருகிறார்.

மார்ச்​ 1-ல்​ மதுரையிலும், 6-ம்​ தேதி வேலூரிலும்​ நடைபெறும்​ தேசிய ஜனநாயக கூட்டணியின்  பிரச்சாரக் கூட்டத்தில்​ பிரதமர்​ மோடி பங்கேற்று பேசுகிறார்.

தமிழக சட்​டப்​பேரவைத் தேர்​தலை முன்​னிட்​டு, தமிழகத்​தில் பாஜக தனது கூட்​ட​ணிக் கட்​டமைப்பை வலுப்​படுத்​து​வ​தி​லும், புதிய கூட்​ட​ணிக் கட்​சிகளை ஈர்ப்​ப​தி​லும் முழு வீச்​சில் ஈடு​பட்டு வரு​கிறது. ஏற்கனவே பாஜக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பல கட்சிகள் இணைந்துள்ள நிலையில், தேமுதிகவை இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,  ஏற்​கெனவே  ஜனவரி மாதம் 23ந்தேதி மது​ராந்​தகத்​தில் நடை​பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் (என்​டிஏ)  முதல் பொதுக்​கூட்​டத்​தில் கலந்துகொண்டு உரையாற்றியதன்  மூலம் பிரதமர் மோடி தனது தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார்.

இதைத்​தொடர்ந்​து, அடுத்த மாதம் இரு​முறை தமிழகத்​தில் சூறாவளிப் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார். மார்ச் 1-ம் தேதி மதுரை​யில் நடை​பெறும் பொதுக் ​கூட்​டத்​தில் பங்​கேற்​கிறார். இக்​கூட்​டத்​தில் கூட்ட​ணி​யின் தற்​போ தை​யத் தலை​வர்​களு​டன், புதி​தாக இணை​ய​ உள்ள கட்​சித் தலை​வர்களும் பங்​கேற்​பார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இது அரசியல் வட்​டாரத்​தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

மதுரையைத் தொடர்ந்​து, மார்ச் 6-ம் தேதி வேலூரில் நடை​பெறும் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் பிரதமர் உரை​யாற்​றுகிறார். பிரதமரின் இந்​தப் பயணங்​களை ஒருங்​கிணைக்க, மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தலை​மை​யில் மாநில அளவி​லான சிறப்​புக் குழுக்களை கட்சித் தலைமை அமைத்துள்​ளது.

இதுகுறித்து பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமர் மோடியின் சுற்​றுப்​பயண நிகழ்ச்​சிகளை பொறுப்​பேற்று வழிநடத்த மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தலை​மை​யில் மாநில அளவில் குழு அமைக்​கப்​படு​கிறது.

அந்​த வகை​யில், மதுரை பயணத்​துக்கு பொறுப்​பாளர்​களாக மாநில பொதுச் செய​லா​ளர்​கள் எம்​.​முரு​கானந்​தம், ராம சீனி​வாசன், பொன் வி.​பால​கணபதி ஆகியோர் நியமிக்​கப்​படு​கின்​றனர்.

இதே​போல், வேலூர் சுற்​றுப்​பயண நிகழ்ச்​சிக்கு பொறுப்​பாளர்​களாக மாநில துணை தலை​வர் கரு.​நாக​ராஜன், மாநில பொதுச் செய​லா​ளர் கார்த்​தி​யா​யினி, மாநில செய​லா​ளர் வெங்​கடேசன் ஆகியோர் நியமிக்​கப்​படு​கின்​றனர்.

இவ்​​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

[youtube-feed feed=1]