சென்னை: சட்டமன்றத் தேர்தலை திமுக – காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே சந்திக்கும் என்றும், 200க்கும் மேற்பட்டதொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என்றும் இந்தியா டுடே நடத்திய வட்டமேஜை தொலைக்காட்சி கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்தியா டுடே பத்திரிகை மூலம் கருந்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், காங்கிரசிற்கும் தெரியும் என்றும், சகோதரரைப் போன்றவர் ராகுல்காந்தி என்றும், திமுக காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்றும் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த திட்டமிட்ட சதி என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “இந்தியா டுடே வெளியிட்ட கருத்து கணிப்பை உண்மையாக்குவோம் என்று கூறியதுடன், 3% வாக்கு வித்தியாசம் இருந்தாலே பெரும்பாலான இடங்களில் மாபெரும் வெற்றி கிடைக்கும். ஆனால், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 12% வாக்கு வித்தியாசம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியதுடன், . தமிழக மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்று எடுத்து கணக்கெடுப்பில் தி.மு.க கூட்டணி வெல்லும் என தெரியவந்துள்ளது.
தி.மு.க அரசின் சாதனை திட்டங்களால் 65-க்கும் மேற்பட்ட விருதுகள் தமிழ்நாட்டை தேடி வந்துள்ளது. தமிழ்நாட்டிற்கும் தி.மு.க அரசிற்கும் குடைச்சல் கொடுப்பதில் மத்திய பா.ஜ.க அரசு முனைப்பு காட்டி வருகிறது. தி.மு.க வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்தாலும் நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம். தொடர்ந்து உழைப்போம். இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை கூட தி.மு.க ஆட்சியில் அடைந்தோம். தலைசிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டின் 33 கல்லூரிகள் இருக்கின்றன.
தமிழக அரசின் தோழி விடுதி திட்டத்தை மத்திய அரசு பின்பற்றுகிறது. மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. ஊழல் கூட்டணிக்கு பெயர் தான் டபுள் என்ஜின் கூட்டணி. மத்திய அரசு தமிழகத்துக்கு பட்ஜெட்டில் கொடுத்தது ஜீரோ, தேர்தலில் அவர்களுக்கு ஜீரோ தான் என்றவர், தமிழ்நாட்டின் வெற்றி பயணத்தை 2.0 ஆட்சியிலும் தொடர்வோம்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது. தி.மு.க-காங்கிரஸ் இணைந்து போட்டியிடும். அரசியலையும் தாண்டி என்னுடைய சகோதரரைப் போன்றவர் ராகுல்காந்தி. சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும்” என்றார். ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும்.. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர்.
திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள் என்று கூறியவர், 2021 தேர்தலை விட 2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம். 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கவுள்ளோம். 2021 தேர்தலை விட 2026 தேர்தல் கடினமாக இருக்கும் என்பது எதிர்க்கட்சிகள் மக்களை குழப்ப பேசும் பேச்சு”.
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]