சென்னை: பாமகவில் இருந்து 3 எம்எல்ஏக்களை நீக்கம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். அன்புமணி ஆதரவாளர்களான 3 எம்எல்ஏக்களை நீக்கி உள்ளார். இதுதொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பாமக தலைவர் அன்புமணி, ராமதாஸ் ஆதரவாளர்களான ஜிகேமணி, சேலம் அருளை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தற்போது ராமதாஸ், அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களான பாலு உள்பட 3 எம்எல்ஏக்களை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழக எம்எல்ஏக்களின் பதவிகள் முடிய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், தற்போது எம்எல்ஏக்கள் நீக்கப்படுவதும், மாற்று கட்சிகளில் இணைவதும் அரசியலாகவே பார்க்கப்படுகிறது.
பாமகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தின் போது ராமதாஸ்- அன்புமணிக்கு இடையில் தொடங்கிய மோதல் ஒரு வருடத்தை கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பாமகவில் அன்புமணி தரப்பில் ஒரு அணியும், ராமதாஸ் தரப்பில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறார்கள். பாமகவின் தலைவர் அன்புமணிதான் என தேர்தல் ஆணையம் உறுதி சய்துள்ளது. இதனால் கடும் கோபமடைந்துள்ள ராமதாஸ், அன்புமணிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையில், அன்புமணி அணியானது அதிமுக- பாஜக தலைமையில் கூட்டணியில் இணைந்துள்ளது. ராமதாஸ் தரப்பிலோ திமுக அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே அன்புமணி தரப்பு நிர்வாகிகளை ராமதாசும், ராமதாஸ் தரப்பு நிர்வாகிகளை அன்புமணியும் கட்சியை விட்டு மாறி மாறி நீக்கி வருகிறார்கள். ஏற்கனவே ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்களாக உள்ள ஜி.கே. மணி மற்றும் அருள் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி உத்தரவிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அன்புமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, இதுகுறித்து பாமக பொதுச்செயலர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 20.07 2025 ல் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்காமல் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ் வரன் ஆகிய மூவரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று 12.01.2026 முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியினர் யாரும் மேற்கண்ட மூவரிடம் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியில் இருந்து நீக்கம்? ஜி.கே.மணிக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாமக தலைவர் அன்புமணி…
பா.ம.க. எம்எல்ஏ அருளை கொறடா பதவியில் இருந்து நீக்கக்கோரி சட்டசபை செயலரிடம் பாமக எம்எல்ஏக்கள் மனு…
பா.ம.க. எம்எல்ஏ அருளை கொறடா பதவியில் இருந்து நீக்கக்கோரி சட்டசபை செயலரிடம் பாமக எம்எல்ஏக்கள் மனு…
[youtube-feed feed=1]