சென்னை
தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற நலிந்த 10 கலைஞர்கலுக்கு முதவர் ம் க ஸ்டாலின் பொற்கிழியாக ரூ. 5 லட்சம்வழங்கினார்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்இன்று (26.2.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
மேலும் அவர், தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்க 5 நூலாசிரியர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் புதிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாடகக் கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்/
இதைத் தவிர தமிழில் புதிய நாட்டிய நாடகங்களை தயாரித்து மேடையேற்றம் செய்ய 5 நாட்டியக் கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் 20 மறைந்த கலைஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார்.