சென்னை

மிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்/

இன்று தமிழக காக்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்.

”மத்திய பா.ஜ.க. அரசு மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது முதற்கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை எந்தெந்த வகையில் வஞ்சிக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் கடுமையாக பாதிக்கப்பட போகும் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.

இதை உணர்ந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதி 40 கட்சிகள் அடங்கிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்கிறேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் மிகமிக முக்கியமான பிரச்சினை குறித்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்த மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது. அதற்கு மாற்றாக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543 இல் இருந்து மாற்றாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் உத்தரபிரதேசம் மற்றும் பீகாருக்கு முறையே 11 தொகுதிகளும், 10 தொகுதிகளும் கூடுதலாக கிடைக்கும். தமிழகத்துக்கு 8 தொகுதிகள் குறைவாக கிடைக்கிற வகையில் இழப்பு ஏற்படும்.

எனவே, வருகிற 5 ஆம் தேதி தமிழக முதல்வர்ர் கூட்டியிருக்கிற அனைத்து கட்சி கூட்டத்தின் மூலமாக தமிழகத்துக்கு  மக்களவையில் ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய முடிவு அக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமழகத்தின் உரிமைகளை காப்பாற்றுவதற்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று தெரிவித்துள்ளார்.