சென்னை: தமிழ்நாட்டு காவல்துறையில் பணியாற்றி வரும் குரூப் 1 அதிகாரிகள் (sp) 26 பேருக்கு பதவி உயர்வு அளித்து உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2001 முதல் 2005 காலக்கட்டத்தில் பணியில் சேர்ந்த குரூப் 1 அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டு உள்ளனர்.

இந்த பதவி உயர்வு குறித்து பல ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், குரூப் 1 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 26 காவல்துறை அதிகாரிகள் (எஸ்.பி.) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குரூப் 1 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதில் தமிழக காவல்துறையில் குரூப் 1 நிலையில் பணிபுரிந்த அதிகாரிகள் ஐபிஎஸ் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அதன்படி, 2001 பேட்ச்சை சேர்ந்த – 2 பேர், 2002 பேட்ச்சை சேர்ந்த – 9 பேர், 2003 பேட்ச்சை சேர்ந்த – 14 பேர், 2005 பேட்ச்சை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 26 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்ற 26 பேரின் பெயர்கள்:
- மணி
- செல்வகுமார்
- சுதாகர்
- எஸ்.ஆர்.செந்தில் குமார்
- முத்தரசி
- பெரோஸ்கான்
- அப்துல்லா
- சக்திவேல்
- நாகஜோதி
- ராஜராஜன்
- விமலா
- சுரேஷ்குமார்
- பாஸ்கரன்
- சண்முகப் பிரியா
- ஜெயக்குமார்
- மயில்வாகன்
- ஜெயலட்சுமி
- சுந்தர வடிவேல்
- உமையாள்
- சரவணன்
- செந்தில் குமார்
- மகேந்திரன்
- சுப்புலட்சுமி
- ராஜன்
- செல்வராஜ்
- ஸ்டாலின்
முன்னதாக கடந்த டிசம்பர் 18ஆம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2018 முதல் 2022 வரையிலான பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அறிவிப்பால் பதவி உயர்வு பெற்ற குரூப் 1 அதிகாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
