கோவை: கோவை சிறையில் கொல்லப்படுவேன் கோவை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் ஆவேசமாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக அரசுமீது கடுமையான விமர்சனங்களை வைத்த சவுக்கு சங்கர்மீது, காவல்துறையினர் அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளை போட்டு, சிறையில் அடைத்து வைத்துள்ளனர். தற்போது குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் சவுக்கு சங்கர் கைகள் மற்றும் உடல்களில் காயம் இருப்பதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டிய நிலையில், அதை உறுதி செய்யும் வகையில், அவரது கைகளில் கட்டுபோடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை சவுக்கு சங்கரை சிறைத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், சவுக்கு சங்கர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால், அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையில், மருத்துவ பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் வலது கையில் மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது மீண்டும் வலது கையில் மாவு கட்டு போட்டு அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கர் கோவை சிறையில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக சவுக்கு சங்கர் முழக்கமிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
Video: Thanks Polimer TV