மேஷம்
வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. ஆனால் உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. ஸ்டூடன்ட்ஸ் தங்களோட படிப்புல அதி தீவிரமாக லட்சிய மனப் பான்மையுடன் படித்து புதிய சாதனை நிகழ்த்துவாங்க. தந்தை, மகன் இடையே நல்ல நட்புறவு இருக்கும் வகையில் நடந்து நற்பெயர் பெறுவீங்க. வாகன, பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். தொழிலதிபர்கள் தொழில் சார்ந்த வகையில் உள்ள சிரமங்களை தவிர்க்க, புதிய யுக்திகளை செயல்படுத்தி பலமான வெற்றிகளை பெறுவீங்க. வெளியூர் பயணங்களில் அனுகூலமான அனுபவங்களும், வெற்றியும் உண்டாகும். தொழிலாளர்களை நன்மதிப்புடன் நடத்துவீங்க. அவங்களும் நன்றியோட நடந்துக்குவாங்க. உத்தியோகத்துல உள்ளவங்க அடுத்தவங்களை நம்பிப் பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
குடும்பத்துல இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீங்க. பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மனசங்கடம் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. விருந்து விசேஷங்களுக்கு செல்வீங்க. சஞ்சலம், குழப்பத்தால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாறுவீங்க. சிறிதளவு ஜீரணப் பிரச்னையினால் உடல் நிலை பாதிப்படைந்து மீளும். முடியுமானால் பிரயாணங்களை அவாய்ட் செய்யப்பாருங்க. வாகன மாற்றம் இருக்கும். கொடுக்கல், வாங்கல் லாபம் தரும். செலவுகள் குறைந்து நிறைவோடு இருப்பீங்க. தொலைத்தொடர்பு அனுகூலம் தரும்.
மிதுனம்
பிசினஸில் புதிய முயற்சிகளைச் சற்றுத் தள்ளிப்போட முடியுமானால் நல்லது. போட்டியாளர்களை சமாளிக்க நேரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. குழந்தைங்களால மனசுக்கு சந்தோஷம் உண்டு. தன வரவும், புதிய பொருள் சேர்க்கையும் கெடைக்கும். ஸ்டூடன்ட்ஸ் உயர்கல்வி பயிலவும், விரும்பிய படிப்புகளில் சேர எடுக்கும் முயற்சிகள் சிறு தடைகள் மற்றும் தாமதத்துக்குப் பின் முழுமையாக நிறைவேறும். கணவன் மனைவி ஒற்றுமை கூடும். உறவினர்கள். நண்பர்கள் பல்வேறு வழிகளில் உதவுவர். பெற்றோரின் உடல் நலன் சீராக இருக்கும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை மறையும் நண்பர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாட்டில் பணிபுரிவர்கள் முன்னேற்ற மடைவாங்க. பெண்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டாகும். ஒங்களோட நினைவாற்றல் காரணமா நல்ல விஷயம் ஒண்ணு நடக்கப்போகுது.
கடகம்
அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவிஉயர்வையோ ஊதிய உயர்வையோ எதிர்பார்க்கறீங்களா? நிச்சயம் உங்க எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகள் மெல்ல வடிவெடுத்து நல்லபடியாக முடியும். எதிர்கால முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் மனதில் உதயமாகும். இது பிற்கால நன்மைக்கு வழிவகுக்கும். புதிய தொழில் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும் பெண்களுக்கு மிகச் சிறந்த வாரமாக இது உள்ளது. வேலை மாறுவது சம்பந்தமாக விஷயம் தெரிந்தவர்களின் ஆலோசனையை எடுத்துக்கொள்ளுங்கள். நகை வியாபாரம் முன்னேற்றம் தரும். புதிய முதலீடுகளை நல்லா யோசிச்சு செய்யுங்கப்பா. மேலதிகாரிகள் மற்றும் முதலாளியிடம் விட்டுகொடுத்து போக வேண்டும்.
சிம்மம்
மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால் உங்கள் குடும்பத்தினருடன் மனஸ்தாபம் ஏற்படாதபடி கவனமாக இருங்கள். இயந்திரங்கள், வாகனம் இயக்கும் போது அவசரமோ பதற்றமோ வேண்டாம். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடுவீங்க. எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். பள்ளி கல்லூரி நண்பர்களால் சிறு சந்தோஷம் ஏற்படும். காதல் சம்பந்தமான மகிழ்ச்சியான நிகழ்வுகள் மனதிற்கு இதமளிக்கும். அலுவலகத்திலோ வியாபாரத்திலோ கருத்து வேறுபாடுகளின் போது மௌனம் காப்பது நல்லது. திடீர் ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தன வரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கெடைக்கும். எல்லா விஷயங்களிலும் தடைகளும் தாதமங்களும் இருந்தாலும் இறுதியில் நல்ல விஷயம் நடக்கும். கணவரோடு/ மனைவியோடு சண்டை வேணாம்.
கன்னி
வியாபாரத்துல சற்றுக் கூடுதலா உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பார்ட்னர்ஸ் உங்க முயற்சிகளுக்கு உதவிகரமாக இருப்பார்கள். புதிய முதலீடுகள் செய்வீங்க. கணவன், மனைவி ஒற்றுமையில் அந்நியர்களின் மத்யஸ்தம் வேண்டாம். நிம்மதி கிடைக்கும்‘. சுப நிகழ்ச்சிகள் சற்றுத் தள்ளிப்போகக்கூடும். விசா தொடர்பான நல்ல செய்தி வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெண்களின் பயம் நீங்கும். பணியில் பொறுப்பின்மைகாரணமாக சிரமங்கள் நேரலாம். பெற்றோரின் உடல் நிலை மேம்படும். ஸ்டூடன்ட்ஸ் போட்டி தேர்வுகளில் நல்ல மார்க்ஸ் வாங்குவாங்க. உடலில் ஏற்படும் சிறுஉபாதைகளுக்கும் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். வாகன செலவுகள் ஏற்படும். நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீங்க. குலதெய்வ வழிபாடு நன்மை தரும். பயணங்களால் செலவுகள் உண்டு. கூடவே சந்தோஷமும் உண்டுங்க. நிலம் சம்பந்தபட்ட இனங்களில் புதிய முதலீடுகள் செய்ய ஏற்ற வாரம்.
துலாம்
பிரச்னை இல்லாத வாரம். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். ஆபீசுக்குப் போகிற பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதால் ஹாப்பியா இருப்பீர்கள். பங்குச் சந்தையில் மிக அளவோடு ரிஸ்க் எடுங்கள். அதிகாரம் உள்ள பதவியில் அமர்வீங்க. பெண்களுக்குக் கணவரின் பாராட்டுக் கிடைக்கும். மாணவர்களின் கவலைகள் தீரும். திறமைகள் வெளிப்படும். பயம் தீர்ந்து நன்மை பெறும் வாரம். குடும்பத்துடன் உற்சாகமாகப் பொழுது போகும். பணியாளர்கள் முன்னேற்றம் அடைவாங்க. வெளிநாட்டு வாய்ப்பு தள்ளிப்போகக்கூடும். பழைய நண்பர்களைச் சந்திப்பீங்க. அரசு சம்பந்தமான உதவிகள் கெடைக்கும். கடன் சுமை தீரும். அயல் நாட்டு உதவி கிடைக்கும். பெண்களின் பொறுமைக்குப் பரிசு உண்டு. கலைஞர்களின் எண்ணம் வெற்றி பெறும். தாமதப்படுத்தப்பட்டு வந்த வேலைகள் முடியும். சக பணியாளர்களின் தொல்லை தீரும். தேவையற்ற செலவை அவாய்ட் செய்ங்க.
விருச்சிகம்
பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடந்த சில நாள்களாகக் கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களும் அதனால் சந்தோஷமும் லாபமும் உண்டாகும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்களும் உறவினர்களும், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். உங்களோட முயற்சியால எதிர்பாராத பணவரவும் கிடைக்கக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீங்க இட மாற்றம் சம்பந்தமாக முயற்சிகளில் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். இதுவரை அலவலக வேலையில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி மனதில் முழுமையான நிம்மதி கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டாலும் சமாளிப்பீங்க.
சந்திராஷ்டமம் : மே மாதம் 10ம் தேதி முதல் மே மாதம் 13ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.
தனுசு
ஆபீஸ்ல ஹாப்பியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையா நடந்துக்குவாங்க. ஒரு சிலருக்கு அவங்க எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் உற்சாகம் தரும். பிசினஸ் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர் கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். திறமை காரணமாக நல்லபெயர் பெறுவீங்க. எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். இளைஞர்களுக்குப் புத்துணர்ச்சி பெருகும். பங்குதாரர்களுக்கிடையே முன்பு ஏற்பட்டிருந்த சிறு பிரச்னை இந்த வாரம் சரியாகும். மாணவர்களின் கல்வி திறன் மேம்படும். நண்பர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவீங்க. உறவினர்கள் வழியில் கூடுதல் செலவுகள் இருக்கும். உடல்நிலை பாதிப்பிலிருந்து மீளுவீங்க. பல சிரமங்கள் முடிவுக்கு வந்திருக்கும்.
சந்திராஷ்டமம் : மே மாதம் 13ம் தேதி முதல் மே மாதம் 15ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.
மகரம்
உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதி ஏற்படவும் கூடும். ஆனாலும் நெறைய ஹெல்ப் கெடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வீடு மாற எடுக்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்க்கவும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். அரசு சம்பந்தபட்ட விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். குழந்தைங்க உடல் நலனில் அலட்சியம் வேண்டாம். தொழில், உத்யோகம், பிசினஸில் இருந்த தேக்க நிலை மாறும். தன வரவு திருப்தியளிக்கும். சகோதர சகோதரிகளிடையே வாக்குவாதம் வேணாம். எந்த விஷயத்திலுமே அதிக கவனம் வேணுங்க. எந்த விஷயத்திலும் யாருக்கும் உறுதியளிக்க வேணாம். அதாவது கமிட் செய்துக்காதீங்க.
சந்திராஷ்டமம் : மே மாதம் 15ம் தேதி முதல் மே மாதம் 18ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.
கும்பம்
நல்ல மனிதர்கள் வலிய வந்து உறவுகளைப் புதுப்பிப்பாங்க. முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், அனுபவம் மிக்கவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும். உங்க குழந்தைங்க பற்றி இருந்துக்கிட்டிருந்த டென்ஷன் அறவே விலகி சந்தோஷ சூழல் உருவாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவ தற்கு வாய்ப்பு உள்ளது. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். உறவினர்கள், விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். உடன் பிறந்தோரால் பிரமாதமான ஆதாயம் உண்டு. பெண்கள், கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பீங்க. சொத்துக்கள் அல்லது வீடு வாசல் மூலம் வருமானம் வரும். மகன்/ மகள் விஷயத்தில் விடாமுயற்சியால் வெற்றிகள் கிடைக்கும். பிசினஸில் முன்னேற்றம் காணப்படும். புதிய திட்டங்கள் நன்மை தரும்.
மீனம்
வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிங்க அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அவங்களுக்கு ஒங்க மேல அன்பும் கருணையும் இருக்குங்க. உங்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் குடுக்க அவங்க மனசுக்குள்ள ரகசியமா பிளான் செய்துக்கிட்டிருக்காங்க. எனவே அவங்களை எதிர்த்து எதுவும் பேசிட வேணாம். குழந்தைங்க நலன் மேம்பாடு அடையும். தன வரவு திருப்தி தரும். பழையகடன்கள் அடைபடும். தம்பதியரிடையே அன்யோன்யம் மாறி மாறி இருக்கும்.. அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். பெண்களுக்கு மகிழ்ச்சி கூடும். சக பணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் கூடும். ஹாப்பியான காரணத்துக்காக அலைச்சலுக்கு ஆளாக வாய்ப்புண்டு. கலைஞர்கள் முயற்சிகளில் வெற்றிபெறுவீங்க.