பழனி’
இன்று பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பழனியில் ரோப் கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினந்தோறும் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. தவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளன.
இவற்றில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் ரோப் கார் 3 நிமிடத்தில் மலைக்கோவிலுக்குச் செல்வதால் பெரும்பாலானோர் இந்தச் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ரோப் கார் சேவைகள் பராமரிப்புப் பணி காரணமாகத் தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கமாகும்.
இன்று பழனி முருகன் கோவில் ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே ரோப்கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. ஆகவே பக்தர்கள் மின் இழுவை ரயில் அல்லது படிப்பாளியைப் பயன்படுத்தி மலைக்கோவிலுக்குச் சென்று முருகனை தரிசனம் செய்யக் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.