மதுரை: காதலர்களை கட்டிப்போட்டு இரவு முழுக்க காதலிகளை 4 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் மாறி மாறி பாலியல் வன்புணர்வு செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம், திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.
நாடு முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சி போல, நாட்டில் பெண்கள் மீதான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனை சட்டங்களை செயல்படுத்தினாலும், அவைகள் கட்டுக்குள் வருவது இல்லை. தமிழ்நாட்டிலும் கடந்த சில ஆண்டுகளாக கொலை, கொள்ளை,பாலியல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு காரணம், போதைபொருள் நடமாட்டம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அமைதிப்பூங்கா என ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள், தங்களது காதலர்களுடன் சென்ற இடத்தில், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ள அவலம் அரங்கேறி உள்ளது. திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 17 வயதான இரு சகோதரிகளும், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் கடந்த 30ஆம் தேதி இடையக்கோட்டையில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு திருவிழாவை காண வந்த மூன்று இளைஞர்கள் .இவர்களிடம் நைசாக பேச்சுக்கொடுத்து, அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து உள்ளனர். அப்போது, இரு இளம்பெண்களும், தனியாக காதலர்களுடன் வந்துள்ளதை அறிந்துகொண்டு, அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறத. இதனால், பயந்து போய் என்ன செய்வது என்ன தெரியாமல் திகைத்த காதலர்களை பைக்கில் வேறு இடத்துக்கு அழைத்துச்சென்று கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் அந்த 3 பேர் யாருக்கோ போன் செய்த நிலையில், வேறு ஒருவரும் அங்கு வந்துள்ளார். பின்னர், இந்த 4 பேரும் சேர்ந்து, இளம்பெண்களின் கட்டை அவிழ்த்துவிட்டு, அவர்களை 4 பேரும் மாறி மாறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர், அவர்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர், காதலர்கள் 4 பேரும் காலையில் வீட்டிற்கு வந்து பெற்றோரிகளிடம் கூறி அழுதுள்ளனர். இதையடுத்து, அவர்களின் பெற்றோர்கள், தங்களது மகள்களை கூட்டிக்கொண்டு, அருகே உள்ள சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்..போலீசார் நடத்திய விசாரணையில் முதலில் பைக்கில் வந்த இளைஞர்கள் மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சரண் குமார் (21), முத்தழகுபட்டியை சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் (22) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் போனில் பேசிய ஆசாமி சுள்ளான் பிரசன்ன குமார் (25) என்பதும் தெரிய வந்தது. இவன் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி வழக்குகளும் இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.