சென்னை
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர்களை நியமிக்கத் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 65 துறைகளில் 4000 உதவிப் பேராசிரியர்கள் பணி இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த 4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வு எழ்த விரும்புவோர் வரும் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.