சென்னை

மிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 9 ஆம் தேதி தமிழக அரசு காலியாக உள்ள 1786 இடைநிலை ஆசிரியர் பணிகளை நிரப்பத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தது.  இதற்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது..

விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்யக் கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். எனவே மேற்கண்ட பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யக் கடைசி தேதி 15.03.2024லிருந்து 20.03.2024 மலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தைத் திருத்தம் (Edit Option) மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 2103.2004 முதல் 23.03.2024 மலை 5 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.