சென்னை: டிசம்பர் 9ந்தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 8ந்தேதி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்துகிறார்.

வழக்கமாக பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக பல ஆயிரம் சிறப்பு பேருந்துகள் சென்னை உள்பட நகர்ப்புறங்களில் இருந்து இயக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு, ஜனவரி 15ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வரும் 13ந்தேதி முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் வசிக்கும் லட்சகணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், தற்போது பேருந்து தொழிலாளர்கள் வரும் 9ந்தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளதால், பேருந்துகள் இயக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பேருந்துகள் திட்டமிட்டப்படி இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறி வருகிறார்.

இந்த நிலையில்,  பொங்கல் விடுமுறை காலச்சிறப்பு பேருந்துகள் குறித்து வரும்  8-ஆம் தேதி  அமைச்சா் சிவசங்கா் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவுள்ளாா். இதில், பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் இடம்,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுவிட்டதால் சென்னையில் எந்தெந்த இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்கலாம் என்பது குறித்தும் , பயணிகளுக்கு செய்யவேண்டிய வசதிகள் குறித்தும் இந்த கூட்டடத்தில் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனவரி 9ந்தேதி முதல் ‘பஸ் ஸ்டிரைக்’: போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவிப்பு