மதுரை

மத்திய இணை அமைச்சர் எஸ் பி சிங் விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனக் கூறி உள்ளார்.

இன்று மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்துடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங்  மதுரைக்கு வருகை தந்தார்.

அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அமைச்சர்,

”மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்

இந்தியாவில் ஜே.என்.1 வகை தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது

இந்தியாவில் இந்த புதிய வகை கொரோனாவின் தாக்கம் குறைவாக உள்ளது”

என்று கூறினார்.