கர்நாடகா முதல்வராக சித்தராமையா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சுமார் 25 நிமிடம் மட்டுமே நீடித்தது.
#WATCH | Karnataka | Congress Legislative Party (CLP) meeting underway at the party office in Bengaluru.
(Video: Karnataka Pradesh Congress Committee) pic.twitter.com/bYH6p0X2Dv
— ANI (@ANI) May 18, 2023
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக சித்தராமையாவை டி.கே. சிவக்குமார் முன்மொழிந்தார்.
இதனை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதை அடுத்து சித்தராமையா மற்றும் டி.கே.எஸ். ஆகியோர் ஆளுநர் தாவர்சந்த் கெலோட்-டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோரை பதவி ஏற்க அழைப்பு விடுத்துள்ளார்.
மே 20 ம் தேதி நண்பகல் 12:30 மணிக்கு பெங்களூரில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நாளை காலை 9 மணிக்கு டெல்லி செல்லும் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் மந்திரிசபையில் இடம்பெறும் மற்ற அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.கே. சிவக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் தொடர்வார் என்று நம்பப்படுகிறது.