புதுடெல்லி:
சோனியா குறித்து மார்பிங் வீடியோ வெளியிட்ட ஒருவர் கைது செய்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டதற்காக பிபின் குமார் சிங் சாண்டில்யா என்ற நபரை போலீசார் செய்துள்ளனர்.

இதுகுறித்து பிரதாப்கர் எஸ்.பி. அமித் குமார் வெளியிட்டுள்ள தகவலில், ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள பிபின் குமார் சிங் சாண்டில்யாவை மார்ச் 14 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.