புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டபிபேரவை கூட்டத்தொடர் வரும் 9ந்தேதி தொடங்க உள்ள நிலையில், சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைக்க துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு மாநில முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
பொதுவாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநரால் தொடங்கி வைக்கப்படுவது மரபு. அதன்படி, நடப்பாண்டு, புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 9ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி, சட்டப்பேரவை கூட்டத்தொடரை தொடங்கி வைக்கும்படி, பொறுப்பு ஆளுநர் தமிழிசை முதலமைச்சர் ரங்கசாமி, ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் சென்று அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவை தலைவர் செல்வம் உடனிருந்தார்.
வரும் 9ம் தேதி தொடங்கும் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில், மார்ச் 13ந்தேதி நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.